ஓட்டல் தொழிலாளி தற்கொலை


ஓட்டல் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 23 Nov 2021 10:29 PM IST (Updated: 23 Nov 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வத்தலக்குண்டு: 

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் போதா பகதூர் (வயது 20). ஓட்டல் தொழிலாளி. இவர் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.   இவரது மனைவி வெளியூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்போனில் மனைவியிடம் பேசியுள்ளார்.

 அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த போதா பகதூர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story