ரூ.4 கோடியே 29 லட்சம் வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 29 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது.
இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 92 லட்சத்து 63ஆயிரத்து 140-ம், தங்கம் 461 கிராம், வெள்ளி 4169 கிராம், வெளிநாட்டு கரன்சி 138-ம் இருந்தது.
அதன்படி, 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 288-ம் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story