மயிலம் அருகே பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை பணம் திருட்டு


மயிலம் அருகே பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை பணம் திருட்டு
x
தினத்தந்தி 23 Nov 2021 11:13 PM IST (Updated: 23 Nov 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை பணம் திருட்டு

மயிலம்

மயிலம் அருகே கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் முருகன். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு மயிலத்தில் உள்ள ஓட்டலில் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 2 கிராம் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டனர்.

இதே போல் அதே பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் அரிபதி(47) என்பவரின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த பட்டுப் புடவைகள், பித்தளை பொருட்கள் மற்றும் ரூ.300 ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். 
இதுகுறித்து முருகன், அரிபதி ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story