சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் மலையில் 2 தடுப்பணைகள் உடைந்தது
சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் மலை பகுதியில் கட்டப்பட்ட இரண்டு தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
சோளிங்கர்
சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் மலை பகுதியில் கட்டப்பட்ட இரண்டு தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. தடுப்பணை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பணைகள்
சோளிங்கரில் பிரசித்தி பெற்ற யோக நரசிம்மர் கோவில் 497 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் வீணாவதை தடுக்கவும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், வனவிலங்களுக்கு பயன்படும் வகையிலும் மலைப்பகுதியில் ஆற்காடு வனசரகம் சார்பில் 2003-2004-ம் ஆண்டு இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டது.
இந்த தடுப்பணைகள் மழைக்காலங்களில் நிரம்புவதால் குரங்குகள், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்கள் மற்றும் ஆடு, மாடுகளுக்கு நீராதாரமாக விளங்கி வந்தது. தற்போது பெய்த தொடர் கனமழை காரணமாக இரண்டு தடுப்பணைகளும் நிரம்பி இருந்தது.
உடைந்தது
இந்த நிலையில் தடுப்பணைகள் உடைந்து சேதமாகி உள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story