திருநங்கை மாணவ- மாணவிக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை
திருநங்கை மாணவ- மாணவிக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019-20-ம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒரு திரு நங்கை, ஒரு திருநம்பி மாணவர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.1 லட்சம் மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இதில் பயன்பெற திருநங்கை மற்றும் திருநம்பி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஆதரவற்றோர் பள்ளிகளில் படித்து பிளஸ்-2 வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். அரசு கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 20.12.21-ந் தேதி மாலை 5 மணிக்குள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story