நேரடி நெல் விதைப்பு செயல்விளக்க பயிற்சி


நேரடி நெல் விதைப்பு செயல்விளக்க பயிற்சி
x
தினத்தந்தி 24 Nov 2021 12:01 AM IST (Updated: 24 Nov 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்க பயிற்சி நடந்தது.

சின்னசேலம்,

காளசமுத்திரத்தில் உள்ள சின்னசேலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு செய்வது குறித்த செயல் விளக்க பயிற்சி நடந்தது. இதற்கு வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை தலைமை தாங்கி கூறுகையில்,  தற்போது பெய்து வரும் தொடர் கனமழையினை விவசாயிகள் பயன்படுத்தி நாற்று விடாமல் கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு செய்யலாம்,  ஏக்கருக்கு 7 முதல் 10 கிலோ நெல் விதை போதும். 48 மணி நேரம் ஊறவைத்த விதையினை உழுது சமன்படுத்திய வயலில் விதைப்பு செய்யலாம். விதைத்த 30 நாட்களில் தேவைக்கு அதிகமாக இருக்கும் நாற்றுகளை களைத்து பயிர் முளைக்காத இடத்தில் நடவு செய்யலாம், மேலும் நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் உற்பத்தி செலவு மிகவும் குறையும். நடவு பயிரை விட 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்கு முன்பே அறுவடை செய்யலாம், 20 சதவீதம் நீர் சேமிப்பு செய்யலாம், நேரடி நெல் விதைப்பு கருவி காளசமுத்திரம் கிராமத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ளது. இந்த கருவியினை விவசாயிகள் வாங்கி சென்று பயன்படுத்தி கொள்ளவும் என்றார். தொடர்ந்து கருவி மூலம் நேரடி விதைப்பு செய்வது எப்படி என்பது பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் அறிவியல் நிலைய பேராசிரியர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story