தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 24 Nov 2021 12:14 AM IST (Updated: 24 Nov 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர். 

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், உத்திரக்குடி கிராமத்தில் உள்ள மங்கான் ஏரியும், ஆத்துபிச்சாயி ஏரியும், பெரிய ஏரியும் ஆழப்படுத்தாமலும், அகலப்படுத்தாமலும், மக்கள் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் இருப்பதால் தற்போது ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளது. இனி மேலும் மழை பெய்தால் ஏரி தண்ணீர் வீணாக வெளியேற வாய்ப்புள்ளது. கோடை காலத்தில் ஏரிகளின் நீர் விரைவில் வற்றி மிகக்குறைவான நீர் மட்டும் இருப்பதால், நிலத்தடி நீரும்வற்றி விடுகிறது. ஆகவே அருகே உள்ள கிராமங்களான கழுவந்தோண்டி, சிலால், அங்கராயநல்லூர், தேவாமங்கலம் போன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் எடுத்து வருவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  உத்திரக்குடி, அரியலூர். 

குரங்குகளால் பெரும் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, சத்தியமங்கலத்தில் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை வீடுகளுக்குள் சென்று வைத்திருக்கும் பொருட்களை எடுத்துச் செல்கிறது. சில சமயம் குழந்தைகள் கையில் உள்ள பொருட்களை பறித்து அவர்களை நகத்தால் கீறி காயப்படுத்திவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அசாருதீன், சத்தியமங்கலம், புதுக்கோட்டை. 
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமம் தண்ணீர் பந்தல் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் வைத்துள்ள பொருட்களை எடுத்துச் சென்றுவிடுகிறது. மேலும் குழந்தைகளை கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அசோக் குமார், தண்ணீர் பந்தல், பெரம்பலூர். 

கள்ளத்தனமாக மது விற்பனை 
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை டவுன், நகராட்சி தொடக்கப்பள்ளி,  பழனியப்பா பஸ் நிறுத்தம் அருகே தொடர்ச்சியாக சாலை ஓரமாக காலையில் இருந்து இரவு 12  மணி வரை கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. பள்ளி அருகே மது விற்பனை  நடந்தாலும் காவல் துறை கண்டு கொள்வதில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மாப்பிள்ளையார் குளம், புதுக்கோட்டை.

சுகாதாரமற்ற கழிவறை
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி 15-வது வார்டு சுகாதார கழிவறை சரிவர சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் சுகாதாரமற்று காணப்படுகிறது. மேலும் சுகாதார கழிவறையை சுற்றியும் புதர்மண்டி உள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கழிப்பறையை பயன்படுத்த அச்சப்படுவதுடன், சுகாதாரமற்று இருப்பதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புஞ்சை தோட்டக்குறிச்சி, கரூர். 

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சி பூமருதம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் 2 நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் ஒரு நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து பயன்பாடு இன்றிஉள்ளது. மீதம் உள்ள ஒரு நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் செம்மண் கலரில் குடிக்க பயன்படுத்த முடியாத அளவிற்கு வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கும், குடிக்கவும் குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை.

காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தல் 
புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வயல்களையும் கடந்த  ஜனவரி மாதத்தில் அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நெல் கதிர்கள் அறுவடை நேரத்தில் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஊராட்சி முழுவதும் உள்ள  வயல்களுக்கு 100 சதவீத இழப்பீடு வழங்கினர். ஆனால் 2020-2021-ம் ஆண்டுக்கான காப்பீடு தொகை இன்றளவும் வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை. 

குண்டும், குழியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஒலியமங்கலம் பஞ்சாயத்து சேர்வைகாரன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சேர்வைகாரன்பட்டி, புதுக்கோட்டை. 
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் சுக்கிரன் விடுதி கிராமத்தில் சாலை வசதி இன்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மழைபெய்யும்போது சேறும், சகதியுமான பாதையில் நடந்து சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சேது மாதவன், சுக்கிரன் விடுதி, புதுக்கோட்டை.

வீடுகளில் மழைநீர் புகும் அவலம் 
திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு ஆசாத் தெரு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடிசைப்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளில் மழைநீர் புகும் நிலை உள்ளது.  மேலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் தண்ணீரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மகேஷ், முதலியார் சத்திரம், திருச்சி.
இதேபோல் திருச்சி அம்பிகாபுரம், பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பாலாஜி நகர், திருச்சி. 

உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடை மூடி 
திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவின் நடுப்பகுதியில்  பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு விட்டால் அதனை சரிசெய்யும் வகையில், இரும்பு தகடினை கொண்டு மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூடி அதிக பாரத்தை தாங்க முடியாமல் சற்று உள்வாங்கிய நிலையில் உள்ளதால் அதன் 4 முனைகளும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் 
 கனரக வானங்கள் செல்லும்போது இந்த மூடி உடைந்து பாதாள சாக்கடையில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உறையூர், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், சோமரசம்பேட்டை ஊராட்சி, வயலூர் ரோடு, வாசன் சிட்டியில் 20 கிராஸ் ரோடுகளும், 4 பிரதான சாலைகளும் மிகவும் மோசமாகவும், சேறும் சகதியுமாகவும் இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்காக செல்லும்போது மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.  மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜா, வாசன் சிட்டி, திருச்சி. 
இதேபோல் திருச்சி கே.கே.நகர் ஈஸ்வரி கார்டன் முதலாவது தெருவில் தார்சாலை வசதி இல்லாததால் மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் முறையான வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதிகளில்  மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மோகன், ஈஸ்வரி கார்டன், திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நாச்சிகுறிச்சி பஞ்சாயத்து  இணியனூர் கிராமத்தில் சாலையோரம் குப்பைகள், மருத்துவக்கழிவுகள், மின்சாதன கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் இந்த குப்பைகளை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இணியனூர், திருச்சி. 

நோய் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா அயிலாபேட்டை பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அயிலாப்பேட்டை, திருச்சி. 


Next Story