கிராம நிர்வாக அதிகாரியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


கிராம நிர்வாக அதிகாரியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 12:15 AM IST (Updated: 24 Nov 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அதிகாரியிடம் 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

நச்சலூர், 
திருச்சி மாவட்டம் உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி கிரி முத்துமணி (வயது 30). இவர் கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள தளிஞ்சி பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 4.50 மணியளவில் பணியை முடித்து விட்டு நெய்தலூர் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி கீதா என்பவரது மொபைட்டில் குளித்தலை தாசில்தார் அலுவலகத்திற்கு தேர்தல் பணிக்காக சென்றுள்ளார். அப்போது நெய்தலூர், ராமாயிபனையூர் என்ற இடத்தில் வந்துகொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் கிரி முத்துமணி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்தனர். இதில், கிரிமுத்துமணி மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு கை, தோல்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் காயமடைந்த கிரி முத்துமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேப்ளாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story