3-வதாக பிறந்த பெண் குழந்தை திடீர் சாவு
ராஜபாளையத்தில் 3-வது பிறந்த பெண் குழந்தை இறந்தது. சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் 3-வது பிறந்த பெண் குழந்தை இறந்தது. சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார்.
பெண் குழந்தை சாவு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இனாம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு 5 வயது மற்றும் 1½ வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் மீண்டும் கோவிந்தம்மாள் கர்ப்பம் ஆனார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அவருக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததாகவும், அப்போது 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இந்தநிலையில் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் மற்றும் கிராம உதவியாளர் அழகுராஜ் ஆகியோர் கோவிந்தம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்து இறந்தது தங்களுக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளது என வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சீனிவாசன் அளித்த புகாரின் ேபரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த குழந்தையின் உடலை பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story