சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தவர் கைது
சிவகாசி அருேக சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் மாரியப்பன். இவரும் அதே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் திருமங்கை ஆழ்வாரும் மம்சாபுரம்-நதிக்குடி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நதிக்குடியை சேர்ந்த முத்துச்சாமி மகன் முத்துமாரி (வயது 38) என்பவர் வந்துள்ளார். அவரை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்துமாரி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மாரனேரி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், முத்துமாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story