மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 7:31 PM GMT (Updated: 23 Nov 2021 7:31 PM GMT)

35 கிலோ அரிசி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் கார்டுகளுக்கு 35 கிலோ அரிசி வழங்க கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட அமைப்புக் குழு ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு தா.பழூர் ஊனமுற்றோர் சங்க அனைத்து மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட அமைப்புக் குழு துணைத் தலைவர் பாஸ்கர், ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பிரபாகரன் நன்றி கூறினார்.
பின்னர் 121 மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தயோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்கக்கோரி ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story