உண்ணாவிரதம்
சாத்தூர் அருகே சி.ஐ.டி.யூ. சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யூ. சார்பாக சாத்தூர் போக்குவரத்து பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ேவலுச்சாமி தொடங்கி வைத்தார். சாத்தூர் கிளை சி.ஐ.டி.யூ. தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கண்டக்டர் ராஜாராம் முன்னிலை வகித்தார். இதில் 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதேபோல காரியாபட்டி, ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story