மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா
பாளையங்கோட்டையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை:
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி விடுதியில் தங்கிருந்த மற்ற மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ கல்லூரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story