உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது


உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 24 Nov 2021 1:13 AM IST (Updated: 24 Nov 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது

ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. அம்மன் சன்னதி திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து நேற்று இந்த உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில் பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் ராமநாதபுரம் ஆய்வாளர் தங்கையா கோவிலின் மேலாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ. 1 கோடியே 21 லட்சத்து 99,250-ம் மற்றும் தங்கம் 94 கிராமும், வெள்ளி 1 கிலோ 900 கிராமும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் பேஸ்கார்கள் கமலநாதன், ராமநாதன், அண்ணாதுரை, ஆய்வாளர்கள் முருகானந்தம், பிரபாகரன், தக்கார் பிரதிநிதி வீரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது 2 மாத உண்டியல் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story