ஆயுதங்களுடன் 4 பேர் கைது
ஆயுதங்களுடன் 4 பேர் கைது
சிவகங்கை
சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சிவகங்கை ெரயில் நிலையம் பின்புறம் உள்ள ஓரிடத்தில் 4 பேர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் அனைவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சிவகங்கையை அடுத்த அரசநேரி கீழமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு(வயது 35), ரஞ்சித்(30), அரவிந்த் (29) மற்றும் நாட்டரசன்கோட்டையை அடுத்த கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டி(30) என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும் சிவகங்கை பகுதியில் நடைபெற்ற 2 கொலை வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story