தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
மின்கம்பம் மாற்றப்பட்டது
இலவுவிளை சந்திப்பில் இருந்து நெல்வேலி செல்லும் சாலையில் ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகளில் வெடிப்பு ஏற்பட்டு முறிந்து விழும் ஆபாய நிலையில் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நட்டுள்ளனர். நடவடிக்கை எடுத்த துறையினரையும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்
வடக்கு தாமரைகுளத்தில் இருந்து பறக்கை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பழையாற்றின் மீது ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஓரத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தடுப்புசுவர் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதன்மணி, வெள்ளையன்தோப்பு.
சீரான குடிநீர் வினியோகம் தேவை
கோதநல்லூர் பேரூராட்சி குமாரபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட மணலிக்கரை பகுதியில் எஸ்.ஏ. தெரு உள்ளது. இந்த தெருவில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சீரான குடிநீர் வினியோகம் சய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.வில்சன்,மணலிக்கரை.
நாய்கள் தொல்லை
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னப்பநாடார் காலனியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் வழக்கமாக உள்ளது. இதனால், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.
-மரு.ரமேசுகுமார், பொன்னப்பநாடார் காலனி.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
தாழக்குடி பேரூராட்சி வடக்கு பள்ளத்தெரு பகுதியில் உள்ள 2 மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. இங்கு பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை அகற்றி புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்க எடுக்க வேண்டும்.
-ஆதிக், தாழக்குடி.
Related Tags :
Next Story