மாவட்ட செய்திகள்

கந்தூரி விழா + "||" + Kanthuri Festival

கந்தூரி விழா

கந்தூரி விழா
நெல்லை ராமையன்பட்டியில் கந்தூரி விழா நடந்தது.
நெல்லை:
நெல்லை ராமையன்பட்டி பர்ஜீல்லாஷா தர்கா கந்தூரி விழா நடந்தது. இதையொட்டி கொடியேற்று விழாவும், தர்காவில் முத்தவல்லி அபுபக்கர் தலைமையில் சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. விழாவில் நேற்று விளக்கு வைபவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை முத்தவல்லி அபுபக்கர் மற்றும் இணை முத்தவல்லிகள் செய்து இருந்தனர்.