மாவட்ட செய்திகள்

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை + "||" + Young man commits suicide by jumping into well

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
களக்காடு அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

தனியார் நிறுவன ஊழியர்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலப்பத்தையை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய மகன் செல்வபசுபதி (வயது 19). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். 
செல்வபசுபதியும், ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் செல்வபசுபதி காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்தனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை

இதனால் வேதனை அடைந்த செல்வபசுபதி நேற்று முன்தினம் ஊருக்கு அருகே உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்று கிணற்றில் குதித்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றிய தகவல் அறிந்ததும், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செல்வபசுபதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சோகம் 

காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
தோகைமலை அருகே திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.