மாவட்ட செய்திகள்

டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை + "||" + Suicide

டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை

டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
லால்குடி,நவ.24-
வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
டிரைவர்
லால்குடி அருகே உள்ள பூவாளூர் புதுக்குடி கிராமத்தை  சேர்ந்தவர் பிரபு (வயது 38). டிரைவரான  இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த பிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரி வாலிபர்
இதேபோல் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கவுதம் (21) பட்டதாரியான இவர் குடல் பிரச்சினையால் அவதிஅடைந்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் எலி பேஸ்ட்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  துறையூர் அரசு மருத்துவமனையில சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுதம் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
2. தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ரிஷிவந்தியம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
3. அவதூறாக பேசியதால் தூய்மை பணியாளர் தற்கொலை
ராஜபாளையம் அருகே அவதூறாக பேசியதால் தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
4. விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை
விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
5. விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
சோழவந்தான் அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.