மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 24 Nov 2021 1:42 AM IST (Updated: 24 Nov 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பேட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

நெல்லை:
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அரசகுமார் (வயது 19). பேட்டை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அப்போது அரசகுமார் தனது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக, சார்ஜரை மின்பெட்டியில் பொருத்தி சுவிட்ச் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சுவிட்ச் மூலம் மின்சாரம் தாக்கியதில் அரசகுமார் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் அரசகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி, அரசகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story