மாவட்ட செய்திகள்

காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Women demonstrate with huts

காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
சுரண்டை அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள கழுநீர்குளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீராக குடிநீர் வழங்க கோரி அந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தெருமுனையில் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய துணை செயலாளர் பாபு தலைமையில், முருகன், ஜீவா, தங்கம், பூமாரி, முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
வத்திராயிருப்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
35 கிலோ அரிசி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. பாலியல் தொல்லையால் கரூர் மாணவி தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பாலியல் தொல்லையால் கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ரெட்டிபாளையம் ஏரிக்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.