சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 10:18 AM IST (Updated: 24 Nov 2021 10:18 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடத்தூர்:
கடத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது லாரி டிரைவரான சபரிமுத்து (20) அந்த சிறுமியின் வீட்டில் புகுந்து  பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வீட்டின் வெளியே நின்றிருந்த அவருடைய நண்பர்கள் 2 பேர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். அப்போது அந்த சிறுமியின் சகோதரர் வீட்டிற்கு வந்ததால் சபரிமுத்து மற்றும் அந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார்,  சபரிமுத்து, ஸ்ரீகாந்த் (20), திருப்பதி (21) ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story