வேப்பனப்பள்ளி அருகே கரடிகள் தாக்கி விவசாயி படுகாயம்


வேப்பனப்பள்ளி அருகே  கரடிகள் தாக்கி விவசாயி படுகாயம்
x
தினத்தந்தி 24 Nov 2021 11:09 AM IST (Updated: 24 Nov 2021 11:09 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே கரடிகள் தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே புதிமுட்லு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது56). விவசாயியான இவர் நேற்று அங்குள்ள வனப்பகுதி அடிவாரத்தின் மாடுகள் மேய்க்க சென்றார். பின்னர் அவர் மாலை வீடு திரும்பும் போது ஒரு கரடி மற்றும் 2 குட்டிகளுடன் வந்து சீனிவாசன் மீது பாய்ந்து தாக்கியது. இதில் சீனிவாசன் கீழே விழுந்தவுடன் 3 கரடிகளும் தலை, கை, கால்களை கடித்து குதறியது. இதில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் விரைந்து வந்து கரடிகளை வனப்பகுதிக்கு விரட்டினர். பின்னர் அவர்கள் சீனிவாசனை மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Next Story