17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்:ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை-நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்:ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை-நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 11:11 AM IST (Updated: 24 Nov 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

நாமக்கல்:
17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆட்டோ டிரைவர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் அருகே உள்ள சூரியகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் தங்கராசு (வயது 33), ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று, இளம் வயது திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். 
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கராசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தங்கராசுவை கோவை சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Next Story