அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 90 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் 90 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திரளான பா.ஜ.க நிர்வாகிகள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தொற்று காலத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜ.க. நிர்வாகிகள் 90 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story