தூத்துக்குடி வந்த கவர்னர் ஆர்என் ரவியை கலெக்டர் செந்தில்ராஜ் புத்தகம் கொடுத்த வரவேற்றார்

தூத்துக்குடி வந்த கவர்னர் ஆர்என் ரவியை கலெக்டர் செந்தில்ராஜ் புத்தகம் கொடுத்த வரவேற்றார்
x
தினத்தந்தி 24 Nov 2021 4:13 PM IST (Updated: 24 Nov 2021 4:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வந்த கவர்னர் ஆர்என் ரவியை கலெக்டர் செந்தில்ராஜ் புத்தகம் கொடுத்த வரவேற்றார்

தூத்துக்குடி:
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில், அவரை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். இதனை முன்னிட்டு அவர் செல்லும் வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story