தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்
x
தினத்தந்தி 24 Nov 2021 12:14 PM GMT (Updated: 24 Nov 2021 12:14 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உதவித்தொகை
புதுடெல்லி மத்திய முப்படைவீரர் வாரியம் மூலம் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கு, அலுவலர் பதவிக்கு கீழ் ஜே.சி.ஓ. பதவி வரை பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் நடப்பு கல்வி ஆண்டுக்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அல்லது அதற்கு அதிகமாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, தொழில் படிப்பு படிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கலாம்
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் 31.12.21-க்குள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு நேரில் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Next Story