மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் + "||" + The youth who snatched a cell phone from a college student in Kovilpatti was caught by the public and handed over to the police

கோவில்பட்டியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

கோவில்பட்டியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
கோவில்பட்டியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் 2-வது தெருவில் குடியிருப்பவர் மாரியப்பன் மகன் விஜயகுமார் (வயது 18). இவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.காம். முதலாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வேலாயுதபுரம் மாரியம்மன் கோவில் அருகில் விஜயகுமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் விஜயகுமாரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடினா். அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் கூச்சல் போட்டதும் அப்பகுதியிலுள்ள மக்கள் திரண்டு ெசன்று ஒருவரை பிடித்து கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்ட வாலிபரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி விசாரணை நடத்தினார். இதில், அவர் கோவில்பட்டி நடராஜபுரம் 2-வது தெருவில் குடியிருக்கும் கொம்பையா மகன் மந்திரமூர்த்தி (24) என்பது தெரியவந்தது. கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர் விசாரணையில் அவருடன் வந்த வாலிபர் கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்த சங்கரபாண்டி மகன் மூர்த்தி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.