காடுவாகுடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் விவசாயிகள் வேதனை


காடுவாகுடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 24 Nov 2021 7:11 PM IST (Updated: 24 Nov 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

காடுவாகுடி கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் வீணாகி வருவது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.

கோட்டூர்:-

காடுவாகுடி கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் வீணாகி வருவது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. 

நெல் கொள்முதல் நிலையம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காடுவாகுடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு காடுவாகுடி, செல்லப் பிள்ளையார் கோட்டகம், அழகிகோட்டகம், காடுவாகொத்தமங்கலம், பள்ளிச்சந்தம் ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 
சமீபத்தில் குறுவை அறுவடையையொட்டி நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வந்தன. குறுவை அறுவடை முடிந்து 45 நாட்களுக்கு மேலாகியும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 3 ஆயிரம் நெல் மூட்டைகள் இதுவரை எடுத்து செல்லப்படாமல், தேக்கம் அடைந்துள்ளது. 

மழையில் நனைந்து வீண்

கட்டிட வசதி இல்லாத நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மழை நீரில் நெல் மூட்டைகள் நனைந்து விட்டன. இதன் காரணமாக நெல் முளைத்து வீணாகி வருகிறது. மேலும் கொள்முதல் ்நிலையத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. நெல் மூட்டைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. 
பல்வேறு சிரமங்களுக்கு இடையே விளைவித்து, விற்பனை செய்த நெல் வீணாகி வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனடியாக உரிய இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கவோ, அரவைக்கு அனுப்பி பொது வினியோக திட்டத்துக்கு பயன்படுத்தவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story