தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து
தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து
முத்தூர்
காங்கேயத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் கால்நடை தீவனம் மற்றும் முட்டை உற்பத்தி நிறுவனத்திற்கு ஒரு லாரி புறப்பட்டு வந்தது. இந்த லாரியை ஈரோடு மாவட்டம், பாசூர், கணபதிபாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்த ராமசாமிவயது 45 ஓட்டி வந்தார்.
இந்த லாரி முத்தூர் காங்கேயம் பிரதான சாலையில் கணேசபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த லாரி தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில் லாரியின் முன்புற சக்கரம் ஒன்று தனியாக கழன்று விழுந்தது. மேலும் லாரியின் அடியில் உள்ள எஞ்சின் மற்றும் உதிரி பாகங்கள் உடைந்து பலத்த சேதமடைந்து கழன்று விழுந்தன.மேலும் லாரியின் முன்புற இடது பக்கத்தில் இருந்த டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ராமசாமி காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story