மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார் + "||" + Minister Geethajeevan said a new WhatsApp number has been introduced in Thoothukudi district to complain about sexual harassment

தூத்துக்குடி மாவட்டத்தில், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, ஸ்பிக்நகர் இன்னர்வீல் கிளப் ஆகியவை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவிகளுடன் குழந்தைகள் உரிமை தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார். பாலியல் புகார்கள் தெரிவிக்க புதிய வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்து வெளியிட்டார்.
அதிக முக்கியத்துவம்
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். எந்த ஒரு புகாராக இருந்தாலும் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை திருமண சட்டம், போக்சோ உள்ளிட்ட சட்டங்களையும் முறைப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
குழந்தை திருமணம் குறித்த புகார்கள் வந்தால் உடனடியாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு இன்னும் அதிகமான விழிப்புணர்வு தேவைப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
வாட்ஸ்-அப் எண் அறிமுகம்
மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாலியல் தொந்தரவு கொடுப்பது குற்றம். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனியாக வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு 63748 10811 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வாட்ஸ்-அப் எண்ணில் அனைவரும் புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு பெண்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபிபர்ணாண்டோ, திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாத்திமா மேட்டோ, இன்னர்வீல் கிளப் ஆப் தூத்துக்குடி தலைவர் மரியா சேவியர்ஜூடி, திட்ட ஒருங்கிணைப்பாளர் லீனாமகிமை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 138 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 138 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
2. தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவை 6 பேர் வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவை 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
3. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 588 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 6 ஆயிரத்து 588 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
4. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.1¾ கோடி அபராதம் வசூல்
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1¾ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.