மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு + "||" + Awareness to add name in voter list

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு
ஊட்டி

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்து வருகிறது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நீலகிரி கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி கையெழுத்திட்டு விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து அலுவலர்கள், ஊழியர்கள், பயணிகள் கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு கையெழுத்து போட்டனர். இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக நாளை மறுநாள்(சனிக்கிழமை), 28-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.