வைத்தீஸ்வரன்கோவில் ஆனைகட்டி குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வைத்தீஸ்வரன்கோவில் ஆனைகட்டி குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2021 8:36 PM IST (Updated: 24 Nov 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் ஆனைகட்டி குளத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சீர்காழி:
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில்  ஆனைகட்டி குளத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 
ஆனைகட்டி குளம் 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஆனைகட்டி குளம் கோவில் அருகில் உள்ள வண்டிக்காரத்தெருவில் உள்ளது. இந்த குளம் பராமரிக்கப்படாததால் சிலர் ஆனைகட்டி குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். 
ஆக்கிரமிப்புகள் அகற்றம் 
இந்தநிலையில் நேற்று சென்னை ஐகோர்ட்டு  உத்தரவின்பேரில் சீர்காழி தாசில்தார் சண்முகம் தலைமையில்  வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ், சீர்காழி  துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆனைகட்டி குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட  இடங்கள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் வண்டிக்காரத்தெருவில் பரபரப்பு ஏற்பட்டது.  பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் இடித்து அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story