மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகஉதவியாளர் விபத்தில் பரிதாபமாக பலியானார் + "||" + Thoothukudi District Superintendent of Police Office Assistant dies in accident

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகஉதவியாளர் விபத்தில் பரிதாபமாக பலியானார்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகஉதவியாளர் விபத்தில் பரிதாபமாக பலியானார்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக உதவியாளர் விபத்தில் பரிதாபமாக பலியானார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருடைய மகன் சதீஷ்கண்ணன் (வயது 38). இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ்கண்ணன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.