மாவட்ட செய்திகள்

திருமண ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது + "||" + School student abduction auto driver arrested for saying word of marriage desire

திருமண ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது

திருமண ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது
திருமண ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் திருமண ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவி கடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

மாணவி மாயம் 

கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 21-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து பெற்றோர் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருமணம் செய்வதாக கூறி கடத்தல் 

இந்த நிலையில் அந்த மாணவியை கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சேகர் (வயது 27) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து கிணத்துக்கடவு பஸ்நிலையத்தில் நின்றிருந்த சேகர் மற்றும் அந்த மாணவியை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். 

ஆட்டோ டிரைவர் கைது 

அதில் அந்த மாணவி, சேகர் தன்னை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச்செல்வதாக கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரான சேகரை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது
கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2. ஓசூரில் பழ வியாபாரி கொலையில் ஆட்டோ டிரைவர் கைது
ஓசூரில் பழ வியாபாரி கொலையில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.