நெற்பயிரில் இலை சுருட்டுபுழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


நெற்பயிரில் இலை சுருட்டுபுழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
x
தினத்தந்தி 24 Nov 2021 4:44 PM GMT (Updated: 24 Nov 2021 4:44 PM GMT)

நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

கம்பம்:

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், தற்போது 2-ம் போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதில், நெற்பயிரில் இலை சுருட்டுபுழு தாக்குதல் காணப்படுகிறது. இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, கம்பம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு கூறியதாவது:-
இலையை சுருட்டி, அடிப்பகுதியுடன் மடக்கி இணைத்து பின்னி அதற்குள்  அந்துப்பூச்சிகள் குடியிருக்கும். 

இலையின் பச்சையத்தை அரித்து உண்பதால் இலைகள் வென்மையாக மாறிவிடும். இதனால் பயிர் வளர்ச்சி குன்றி நெல்மணிகள் பிடிப்பது பாதிக்கப்படுகிறது. பயிரின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் இந்த பூச்சிகள் தாக்குகின்றன. இதனை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். 

அதாவது வயல்வெளியில் காணப்படும் புல், பூண்டுகள் நெல்லுக்கு மாற்று பயிராக இந்த பூச்சிகளுக்கு உதவுவதால் அவற்றை அகற்றி வயல்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தழைச்சத்து உரங்களை 3 முறை பிரித்து இடவேண்டும். தாய் அந்துப்பூச்சிகள் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுவதால், இரவில் விளக்குப்பொறி வைத்து அவற்றை கவர்ந்து அழிக்க வேண்டும்.

 மேலும் ஒருமுறை பயன்படுத்திய பூச்சி கொல்லியை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. டிரை அசோஸபாஸ், குளோரிபைரிபால், புளு பென்டமைட், கார்டாப் ஹைட்ரோகுளோரைடு உள்ளிட்ட ரசாயண உரங்களை பயன்படுத்தலாம். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு, கம்பம் வட்டார அலுவலகத்தில் உள்ள வேளாண்மை துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story