சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
பெரியகுளத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம்:
பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு, பெரியகுளம் வடகரை மில்லர் ரோட்டில் கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு, சாலையின் மையப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து அதில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறுவது அங்கு வாடிக்கையாகி விட்டது. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story