வங்கியை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வங்கியை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
‘நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி பங்களாமேட்டில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது ‘நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மத்திய அரசை கண்டித்து அப்பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தடையை மீறி முற்றுகையிட முயன்றதால் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 24 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story