அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி
வேலூர்
வேலூர் காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 69). ரெயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மருமகளுக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக வேலை வாங்கித் தருவதாக சென்னையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கூறினார். இதற்காக ரூ.40 லட்சம் பணம் கேட்டார். அதன்படி பணத்தை அவரிடம் கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது அலைக்கழித்தார். அவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story