மாவட்ட செய்திகள்

வேலூர் ஜெயில் கைதி திடீர் சாவு + "||" + Sudden death of Vellore Jail inmate

வேலூர் ஜெயில் கைதி திடீர் சாவு

வேலூர் ஜெயில் கைதி திடீர் சாவு
வேலூர் ஜெயில் கைதி திடீர் சாவு
வேலூர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). இவரை கடந்த மாதம் 7-ந் தேதி திருட்டு வழக்கில் ஆரணி போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்ந நிலையில் கடந்த 19-ந் தேதி லோகநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.