அறந்தாங்கியில் சாலையில் சுற்றித்திரிந்த 88 மாடுகள் நகராட்சி பூங்காவில் அடைப்பு
சாலையில் சுற்றித்திரிந்த 88 மாடுகள் நகராட்சி பூங்காவில் அடைக்கப்பட்டது.
அறந்தாங்கி:
அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் கடந்த வாரம் சாலையில் நின்ற மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி அரசு பஸ் கண்டக்டர் மூர்த்தி என்பவரும், அதேபோல் சாலையில் படுத்து இருந்த மாடுகளை ஏற்றாமல் இருப்பதற்காக ராஜா என்பவர் மோட்டார் சைக்கிளை திருப்பிய போது மரத்தில் மோதி பலியானார். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவர்கள் சொந்த இடத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மாடுகள் பிடிக்கப்படும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆணையர் திருசெல்வம்(பொறுப்பு) உத்தரவில் சுகாதார ஆய்வாளர் சேகர் மேற்பார்வையில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் சுற்றித்திரிந்த 88 மாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து நகராட்சி பூங்கா இடத்தில் அடைத்து பராமரித்து வருகின்றனர். மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி மாட்டை பிடித்து செல்லாமல் தவறும் பட்சத்தில் கும்பகோணம் கோசாலைக்கு மாடுகளை அனுப்பப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story