மாவட்ட செய்திகள்

திருநங்கைகள் வாழ்வுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி + "||" + Awareness art show for transgender life

திருநங்கைகள் வாழ்வுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திருநங்கைகள் வாழ்வுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
திருநங்கைகள் வாழ்வுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
அரக்கோணம்

திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், அவர்களை நல்வழிபடுத்தவும் அரக்கோணம் துைண போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அரக்கோணம் காவல் கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் ேபசுகையில், திருநங்கைகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க ேவண்டும். அவர்களை நல்வழிபடுத்தி, நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வருவதற்கும், அனைத்துத் துறைகளிலும் சிறந்தவர்களாக வரும் திருநங்கைகளுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடு செய்துள்ளது, என்றார். 

அதைத்தொடர்ந்து அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகில் அரக்கோணம் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
அதில் துைண போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் பங்ேகற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். இதில் அரக்கோணம் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, டவுன் தலைமை காவலர் சிவக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.