மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அபராதம்-குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு + "||" + Attack on woman

பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அபராதம்-குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு

பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அபராதம்-குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு
பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அபராதம் விதித்து குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டின் அருகே சிலர் சத்தம் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இதுகுறித்து கேட்ட சரஸ்வதியை அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (53), அவரது மனைவி செல்வி (38), தட்சிணாமூர்த்தியின் அண்ணன் மகாலிங்கம் (60) ஆகிய 3 பேரும்  தாக்கியுள்ளனர். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் விசாரணை நடைபெற்று வந்தது. 
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் சரஸ்வதியை தாக்கிய தட்சிணாமூர்த்தி, செல்வி, மகாலிங்கம் ஆகிய 3 பேருக்கும் தலா 2 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த அபராதத்தொகையில் தலா ஆயிரம் வீதம் 3 பேரும் 3 ஆயிரத்தை சரஸ்வதிக்கு வழங்கவேண்டுமென தீர்ப்பு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வயலில் மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது
வயலில் மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
2. கண்ணமங்கலம்; சிறுவனை கடத்த முயன்றதாக பெண் மீது தாக்குதல்
கண்ணமங்கலத்தில் சிறுவனை கடத்த முயன்றதாக பெண்ணை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். அவரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.