கொலை வழக்கில் கைதான எலக்ட்ரீசியன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதான எலக்ட்ரீசியன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 Nov 2021 12:22 AM IST (Updated: 25 Nov 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் கைதான எலக்ட்ரீசியன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கரூர், 
கரூர் மாவட்டம் கொன்னாச்சி பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). அழகானம் பட்டியை சேர்ந்தவர் அதியமான் (29). இவர்கள் 2 பேரும் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த பிரபாகரன், அதியமானை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தோைகமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் பிரபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கான நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது.

Next Story