கிறிஸ்தவ ஆலய திருவிழா கொடியேற்றம்


கிறிஸ்தவ ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 25 Nov 2021 1:09 AM IST (Updated: 25 Nov 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் அருகே கிறிஸ்தவ ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், சிங்கம்பாறை பங்குத்தந்தை அருள் நேசமணி ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டுத் திருப்பலியும், பகல் 1 மணிக்கு அசனமும் நடைபெற்றது. விழா வருகிற 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தாளார்குளம் பங்குத்தந்தை சந்தியாகு, இறைமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story