2 பேருக்கு தலா 6 மாதம் ஜெயில்


2 பேருக்கு தலா 6 மாதம் ஜெயில்
x
தினத்தந்தி 25 Nov 2021 1:15 AM IST (Updated: 25 Nov 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 2 பேருக்கு தலா 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்,
கடந்த 17-2-2015-ந் தேதியன்று அருப்புக்கோட்டையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த சந்திரன் (வயது 42), முனியசாமி (48) ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதை கண்டறிந்து அவர்களிடமிருந்து ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்திரன் மற்றும் முனியசாமியை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட சந்திரன் மற்றும் முனியசாமி ஆகிய 2 பேருக்கும் தலா 6 மாதம் ஜெயில்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story