கார்த்திகை மாத விரதம் எதிரொலி; திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி


கார்த்திகை மாத விரதம் எதிரொலி; திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 24 Nov 2021 7:46 PM GMT (Updated: 24 Nov 2021 7:46 PM GMT)

கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் விரதம் எதிரொலியாக, திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

திசையன்விளை:
கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் விரதம் எதிரொலியாக, திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மீன் மார்க்கெட்

கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருவதால் விரதம் இருக்கும் குடும்பத்தினர் சைவத்திற்கு மாறியுள்ளனர். இதனால் திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.
வழக்கமாக 10 ரூபாய்க்கு சாளை ரக மீன்கள் 8 முதல் 10 எண்ணம் வரை விற்பனை செய்யப்படும். நேற்று 10 ரூபாய்க்கு 20 சாளை முதல் 30 சாளை மீன்கள் விற்பனை செய்ய ப்பட்டது. கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சீலா ரக மீன் ரூ.500-க்கும், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய் யப்படும் விளை மீன் ரூ.150 முதல் ரூ.200-க்கும், கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படும் மஞ்சள் பாறை மீன் ரூ.100-க்கும் விற்பனையானது.

மலிவு விலையில் விற்பனை

கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நவரை மீன் ரூ.100 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது இதேபோல் அனைத்து ரக மீன்களும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நடை பாதையில் வைத்து மீன்கள் விற்பனை செய்யப்பட்டதால் மீன் மார்க்கெட்டுக்கு வந்தவர்கள் கூட்ட நெரிசலுக்குள் சிக்கினர். இதனால் சமுக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை. மீன்களை நடைபாதையில் வைத்து விற்பனை செய்யாமல் கடைகளுக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என மீன் பிரியர்கள் கூறினர்.

Next Story