ஆண்டாள் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி தரிசனம்
ஆண்டாள் கோவிலில் மத்திய பிரதேச முதல்-மந்திரி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், அவருடைய மனைவி சாதனா சிங் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்தனர். அவரை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு ஆண்டாள் படம் மற்றும் ஆண்டாள் கிளி பிரசாதமாக வழங்கப்பட்டது. அதன்பிறகு ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவுக்கு சிவராஜ் சிங் சவுகான் உணவு பொருட்களை வழங்கினார். அதன் பிறகு ஆண்டாள் பிறந்த இடம், தங்கத்தேர், பெரியபெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பெரியாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்து அங்கிருந்து புறப்பட்டு மதுரை சென்றார். அவரின் வருகையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story