பழுதான கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை


பழுதான கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Nov 2021 1:35 AM IST (Updated: 25 Nov 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

பழுதான கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை

திருச்சி, நவ. 25-
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையம், விபசார தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது போலீசார் அனைவரும் பணியில் இருக்கிறார்களா? துப்பாக்கிகள் சரிவர பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதா? என்றும் மேலும் அங்குள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்று மாநகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, மழையின் காரணமாக மாநகரில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளன. அவற்றை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த ஆய்வின் போது துணை போலீஸ் கமிஷனர்கள் சக்திவேல், முத்தரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story