கீழப்பெரம்பலூரில் கோமாரி நோயால் 2 பசு மாடுகள் செத்தன


கீழப்பெரம்பலூரில் கோமாரி நோயால் 2 பசு மாடுகள் செத்தன
x
தினத்தந்தி 25 Nov 2021 1:39 AM IST (Updated: 25 Nov 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

கோமாரி நோயால் 2 பசு மாடுகள் செத்தன

மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அகரம் சீகூர், அத்தியூர். வயலூர் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைகாந்தி மற்றும் ராமர் ஆகியோரின் 2 பசு மாடுகள் நோய் தாக்கியதில் செத்தன. மேலும் கோமாரி நோய் காரணமாக மங்களமேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகவே, இப்பகுதிகளில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story